Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 319)

Paththati 11 - ஸஞ்சார பத்ததி

தத் தத் வாஸக்ருஹ அங்கண ப்ரணயிந: ஸ்ரீரங்க ச்ருங்காரிண: வால்லப்யாத் அவிபக்த மந்தர கதி: த்வம் மே கதி: பாதுகே லீலா பங்கஜ ஹல்லக உத்பல களத் மாத்வீக ஸேக உத்திதா யத்ர ஆமோத விகல்பநா விவ்ருணுதே சுத்தாந்த வாரக்ரமம்.

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! திருவரங்கன் அந்தந்த பிராட்டிகளின் இல்லத்திற்குச் சென்று வரும்போது, ஒவ்வொரு மலரின் நறுமணம் அவன் மீது உண்டாகிறது. ஸ்ரீமஹாலக்ஷ்மியின் இல்லம் சென்றபோது தாமரைமலரின் மணம், பூமாதேவியின் இல்லம் சென்று வரும்போது செங்கழுநீர்மலரின் மணம், நீளாதேவி இல்லம் சென்று வரும்போது கருநெய்தல் மலரின் மணம் ஆகியவை அவன் மீது வீசுகிறது. இதன் மூலம் அவன் எங்கு சென்று வந்தான் என்று அறிய இயல்கிறது. இவ்விதம் அவனுக்கு அந்தரங்க சேவை செய்பவளாக, அவனுடன் மெதுவாக நடந்து செல்லும் நீயே எனக்குச் சரணம் ஆகிறாய்; எனக்கு அனைத்து நன்மைகளும் அளிப்பாயாக.