Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 318)

Paththati 11 - ஸஞ்சார பத்ததி

அபார ப்ரக்யாதே: அசரண சரண்யத்வ யசஸா நநு த்வம் ரங்கேந்தோ: சரண கமலஸ்யாபி சரணம் யயாலப்ய: பங்குப்ரப்ருதிபி: அஸௌ ரங்கநகர ப்ரதோளீ பர்யந்தே நிதி: அநகவாசாம் நிரவதி:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! திருவரங்கனின் திருவடித்தாமரைகள், வேறு எந்தவிதமான கதி அற்றவர்களையும் காப்பாற்றும் புகழ் கொண்டதாகும். அத்தகைய திருவடிகளுக்கும் அடைக்கலம் அளிப்பது நீ அல்லவா? மிகவும் உயர்ந்த வேதங்களுக்கும் நிதி போன்று உள்ளவன் நம்பெருமாள் ஆவான். அவன் திருவரங்கத்தில் உள்ள உடல் ஊனமுற்றவர்கள் இடம் தேடி வந்து, அவர்களாலும் அடையத்தக்கவனாக உள்ளது உன்னால் அல்லவா?