Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 317)
Paththati 11 - ஸஞ்சார பத்ததி
திதி: அஷ்டமீ யத் அவதார வைபவாத் ப்ரதமா திதி: த்ரிஜகதாம் அஜாயத மணிபாதுகே தம் உபநீய வீதிகாஸு அதிதீகரோஷி தத் அநந்ய சக்ஷுஷாம்
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! திருவரங்கன் க்ருஷ்ணனாக அவதரித்த காரணத்தினால் அஷ்டமி திதி என்பது மூன்று உலகங்களுக்கும் மிகவும் முக்கியமான திதியானது. இப்படிப்பட்ட நம்பெருமாளை நீ திருவீதிகளில் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வருவதன் மூலம், அவனை மட்டுமே பார்த்து, மற்ற எதனையும் பார்க்காமல் உள்ள பரமைகாந்திகளுக்கு, அவனை நீ அதிதி ஆக்குகின்றாய் (அதிதி என்றால் விருந்தினர்).