Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 316)
Paththati 11 - ஸஞ்சார பத்ததி
பவதீம் பரஸ்ய புருஷஸ்ய ரங்கிணோ மஹிமாநமேவ மணிபாது மந்மஹே கதம் அந்யதா ஸ்வ மஹிம ப்ரதிஷ்டித: ப்ரதி திஷ்டதி த்வயி பதாத் பதம் ப்ரபு:
இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! மிகவும் உயர்ந்தவனும், பரமபுருஷனும் ஆகிய ஸ்ரீரங்கநாதனின் பெருமைகளே உனது வடிவம் எடுத்து வந்ததாகவே நாங்கள் எண்ணுகிறோம். அப்படி இல்லையென்றால், நிலை பெற்று நிற்கும் திருவரங்கன் எவ்விதம் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும்போதும் உன்னிடம் உள்ளான்?