Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 315)

Paththati 11 - ஸஞ்சார பத்ததி

ஆஸம்ஸ்க்ராத் த்விஜ பரிஷதா நித்யம் அப்யஸ்யமாநா ச்ரேயோஹேது: சிரஸி ஜகத: ஸ்தாயிநீ ஸ்வேந பூம்நா ரங்காதீச ஸ்வயம் உதயிநி க்ஷேப்துமந்தம் தமிஸ்ரம் காயத்ரீவ த்ரிசதுரபதா கண்யஸே பாதுகே த்வம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! பஞ்சஸம்ஸ்காரம் ஆனவர்கள் (பஞ்சஸம்ஸ்காரம் = தோள்களில் சங்கு சக்கரம் பொறித்துக் கொள்ளுதல், திரு அஷ்டாக்ஷர மந்த்ர உபதேசம் பெறுதல் போன்றவை) அன்றாடம் ஆராதனம் செய்யும்போது ஸ்ரீரங்கநாதனுக்கு உன்னைச் சமர்ப்பிக்கின்றனர். இந்த உலகில் நன்மை ஏற்படக் காரணமாக நீயே உள்ளாய். அன்றாடம் இந்த உலகில் உள்ள இருளை நீகும் சூரியன் போன்று ஸ்ரீரங்கநாதன் ஸஞ்சாரம் செய்யும்போது மூன்று அடி, நான்கு அடிகளுக்கு ஒருமுறை நிற்கிறான். இதனைக் காணும்போது, மூன்று நான்கு அடி உள்ள காயத்ரி மந்த்ரம் போன்று நீ உள்ளாய்.