Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 314)
Paththati 11 - ஸஞ்சார பத்ததி
பௌர உதந்தாத் பரிகலயிதும் பாதுகே ஸஞ்சரிஷ்ணோ: வ்யக்தா வ்யக்தா வசிக விசிகா வர்த்தநீ ரங்கபர்த்து: வேலாதீத ச்ருதி பரிமளை: வ்யக்திம் அப்யேதி கால்யே விந்யாஸை: தே விபுதபரிஷத் மௌளி விந்யாஸ த்ருச்யை:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! திருவரங்கத்தில் உள்ள மக்களின் குறை நிறைகளை அறிந்து கொள்ளும்விதமாக திருவரங்கன் சஞ்சாரம் செய்கிறான். அவன் சென்று விட்டுப் போன வழி எங்கும் உனது அடையாளங்கள் புலப்பட்டும், புலப்படாமலும் உள்ளன. வேதவாஸனை உடைய தேவர்கள், அந்தச் சுவடுகளை வணங்கியபோது, அவர்களது க்ரிடங்களின் சுவடுகளும் அங்கு படிந்து விடுகிறது. இதன் மூலம் அந்தச் சிறு சிறு வீதிகளிலும், மறுநாள் காலையில் உனது சுவடுகள் மிகவும் ப்ரகாசமாகத் தெரிகின்றன.