Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 313)
Paththati 11 - ஸஞ்சார பத்ததி
அக்ரே தேவி த்வயி ஸுமநஸாம் அக்ரிமை அந்தரங்கை: விந்யஸ்தாயாம் விநயகரிம் ஆவர்ஜிதாத் உத்தமாங்காத் தத்தே பாதம் தரமுகுளிதம் த்வத் ப்ரபாவாதி சங்கீ தேவ: ஸ்ரீமாந் தநுஜமதந: ஜைத்ரயாத்ராஸு அநந்ய:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகாதேவியே! அசுரர்களை வெற்றி கொள்ளும் பொருட்டு திருவரங்கன் புறப்படுகிறான். அப்போது தேவர்களில் முதல்வர்களாக உள்ள கிங்கரர்கள், மிகவும் வணக்கத்துடன், தங்கள் தலை மீது வைத்திருந்த உன்னை மிகவும் மெதுவாக திருவரங்கன் முன்பாக வைக்கின்றனர். தேவர்களின் தலைவனும், ஸ்ரீரங்கநாச்சியாருடன் கூடுயவனும், அசுரர்களின் சத்ருவும் ஆகிய ஸ்ரீரங்கநாதன் உனது பெருமையை முழுவதுமாக அறிவான் அல்லவா?ஆகவே உன் மீது தனது திருவடியை வைக்கவேண்டும் என்று சங்கோஜம் அடைந்து, மெதுவாகத் தனது திருவடி விரல்களை தயக்கத்துடன் மடக்கியபடி வைக்கிறான் .