Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 312)

Paththati 11 - ஸஞ்சார பத்ததி

ஸத்யாத் லோகாத் சகல மஹிதாத் ஸ்தாநதோ வா ரகூணாம் சங்கே மாத ஸமதிக குணம் ஸைகதம் ஸஹ்யஜாயா: பூர்வம் பூர்வம் சிரபரிசிதம் பாதுகே யத் த்யஜந்த்யா நீத: நாத: ததிதம் இதரத் நீயதே ந த்வயா அஸௌ

ஸ்ரீரங்கநாதனின் பாதுகை! தாயே! அனைவராலும் புகழப்படும் இடமாக உள்ள ஸத்யலோகம், ரகுவம்சத்தினரின் உரிமையான அயோத்தி ஆகியவற்றைக் காட்டிலும் திருவரங்கத்தில் உள்ள காவேரியின் கரையானது மிகவும் மேன்மை பெற்றது என்று நான் நினைக்கிறேன். ஏன் என்றால் – தான் நீண்ட காலம் இருந்து வந்த இடங்களை விட்டு, உன்னால் இந்தக் கரைக்கு அல்லவோ திருவரங்கன் கொண்டு வரப்பட்டான். இங்கிருந்து அவன் வேறு எங்கும் செல்லவில்லை அல்லவா?