Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 311)
Paththati 11 - ஸஞ்சார பத்ததி
ஸா மே பூயாத் ஸபதி பவதீ பாதுகே தாபசாந்த்யை யாமாரூடோ திவமிவ சுபை: சேவ்யமாநோ மருத்பி: ஸௌதாமிந்யா ஸஹ கமலயா ஸஹ்யஜா வ்ருத்தி ஹேது: காலே காலே சரதி கருணாவர்ஷுக: க்ருஷ்ண மேக:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஆகாயம் போன்ற உன் மீது ஸ்ரீரங்கநாதன் ஏறுகிறான். தேவர்கள் என்ற காற்றின் மூலம் ஆராதிக்கப்படுகிறான். காவிரியின் பெருமையை அதிகப்படுத்தும் விதமாக, அவள் மீது கருணை என்ற மழையைப் பொழிகிறான். மஹாலக்ஷ்மி என்ற மின்னலால் அணைக்கப்பட்ட க்ருஷ்ணன் என்ற அந்தக் கரிய மேகம், இவ்விதமாக சஞ்சாரம் செய்தபடி உள்ளது. இப்படிப்பட்ட இந்த சஞ்சாரத்திற்கு உதவும் நீ, எனது தாபத்தைத் தீர்க்கவேண்டும்.