Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 310)

Paththati 11 - ஸஞ்சார பத்ததி

பரிஸரம் உபயாதா பாதுகே பச்ய மாத: கரண விலயகேதாத் காந்திசீகே விவேகே புருஷம் உபநயந்தீ புணடரீகாக்ஷம் அக்ரே புந: உதர நிவாஸ க்லேச விச்சேதநம் ந:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தாயே! கண் முதலான புலன்கள் ஒடுங்கும் மரண காலத்தில், அந்த வேதனை தாங்காமல் எனது விவேகம் குறையக்கூடும். அந்த நேரத்தில் நீ செய்ய வேண்டியது என்ன? தாமரை மலர் போன்ற அழகான கண்கள் உடையவனும், மீண்டும் கர்ப்பவாசம் (பிறவி) ஏற்படாமல் தடுக்கும் திறன் உள்ளவனும் ஆகிய ஸ்ரீரங்கநாதனை என் எதிரில் கொண்டு வந்து நிறுத்தி, என்னைக் காண்பாயாக.