Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 309)

Paththati 11 - ஸஞ்சார பத்ததி

கமபி கநகஸிந்தோ: ஸைகதே ஸஞ்சரந்தம் கலச ஜலதி கந்யா மேதிநீ தத்த ஹஸ்தம் அநிசம் அநுபவேயம் பாதுகே த்வயி அதீநம் ஸுசரித பரிபாகம் ஸூரிபி: ஸேவநீயம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! காவேரியின் மணல்திட்டில் ஸ்ரீரங்கநாதன் சஞ்சரிக்கிறான். அவன் ஸ்ரீதேவியாலும் பூதேவியாலும் சூழப்பட்டு உள்ளான். சிறந்த புண்ணியங்களின் பயனாக உள்ளான். நித்யசூரிகளால் என்றும் போற்றப்பட்டபடி உள்ளான். உன்னிடம் எப்போதும் வசப்பட்டு உள்ளான். இப்படிப்பட்ட இந்த ஸ்ரீரங்கநாதனை நான் எப்போதும் வணங்கியபடி இருப்பேனாக.