Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 308)

Paththati 11 - ஸஞ்சார பத்ததி

நிதிம் இவ நிரபாயம் த்வாம் அநாத்ருத்ய மோஹாத் அஹம் இவ மம தோஷம் பாவயந் க்ஷுத்ரம் அர்த்தம் மயி ஸதி கருணாயா: பூர்ணபாத்ரே த்வயா கிம் பரம் உபகமநீய: பாதுகே ரங்கநாத:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! பெரியபெருமாள் என்ற பெரிய நிதியை உடையவளாக நீ உள்ளாய். உன்னை அலட்சியம் செய்துவிட்டு, நான் அற்பமான பொருள்களின் பின்னே செல்கிறேன். ஸ்ரீரங்கநாதனின் தயை முழுவதும் வந்து நிரம்பும் இடமாக நான் உள்ளபோதும், அவன் என்னிடம் உள்ள குற்றத்தை மட்டுமே காண்கிறானே! இப்படி உள்ளபோது நீ அவனை, என்னை விட்டு வேறு நல்லவர்களிடம் அழைத்துச் சென்றுவிடுவது சரியா? (என்னிடம் கொண்டுவந்தால் அல்லவா நான் பிழைப்பேன்)