Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 307)
Paththati 11 - ஸஞ்சார பத்ததி
யம நியம விசுத்தை: யம் ந பச்யந்தி சித்தை: ச்ருதிஷு சுளகமாத்ரம் த்ருச்யதே யஸ்ய பூமா ஸுலப நிகில பாவம் மாம்ஸ த்ருஷ்டே: ஜநஸ்ய ஸ்வயம் உபஹரஸி த்வம் பாதுகே தம் புமாம்ஸம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ப்ரம்மசர்யம், அஹிம்சை, ஸத்யம், திருடாமல் உள்ள தன்மை, சொத்து சேர்க்காமல் உள்ள தன்மை ஆகிய ஐந்தும் யமம் எனப்படும். வேதம் ஓதுதல், ஆசாரம், மனநிறைவு, தவம், எப்போதும் பகவத் நினைவு ஆகிய ஐந்தும் நியமம் எனப்படும். இவை இரண்டும் உள்ள தூய்மையான மனம் கொண்ட யோகிகளால் கூட எம்பெருமானைக் காண இயலாது; அவனுடைய பெருமை என்பது அனைத்து வேதங்களின் மூலம் கூட, உள்ளங்கை அளவு மட்டுமே கூறப்பட்டது; இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனை மனிதர்களின் மாமிசக் கண்ணாலேயே காணும்படி, நீ அவனை எழுந்தருளப் பண்ணி வருகிறாய்.