Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 306)
Paththati 11 - ஸஞ்சார பத்ததி
முநி பரிஷதி கீதம் கௌதமீ ரக்ஷணம் தே முஹு: அநுகலயந்த: மஞ்ஜுவாச: சகுந்தா: உஷஸி நிஜ குலாயாத் உத்திதா: தண்டகேஷு ஸ்வயம் அபி பதரக்ஷே ஸ்வைரம் ஆம்ரேடயந்தி
பெரியபெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! தண்டகாரண்யத்தில் உள்ள முனிவர்கள், பர்ண சாலைகளில் நீ செய்த அஹல்யை ரக்ஷணம் குறித்துக் கூறியபடியே இருந்தனர். இதனைக் கேட்ட அங்குள்ள கிளிகள், அதே சொற்களைக் காலையில் தங்கள் கூடுகளில் இருந்து விழித்து எழும்போது, மீண்டும் மீண்டும் கூறியபடியே திரிகின்றன.