Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 305)
Paththati 11 - ஸஞ்சார பத்ததி
அதிகத பஹுசாகாந் மஞ்ஜுவாச: சுகாதீந் ஸரஸிஜ நிலயாயா: ப்ரீதயே ஸங்க்ரஹீதும் ப்ரகடித குணஜாலம் பாதுகே ரங்கபந்தோ: உபநிஷத் அடவீஷு க்ரீடிதம் த்வத் ஸநாதம்
பெரியபெருமாளின் பாதுகையே! அனைத்து வேதங்களின் சொற்களையும் கொண்ட சுகர் போன்ற மஹரிஷிகளை, தாமரை மலரில் அமர்ந்துள்ள ஸ்ரீநங்கநாச்சியாரின் மகிழ்வுக்காக ஸ்ரீரங்கநாதன் பிடிக்க முயல்கிறான். இதனால் அவர்களைத் தேடி உபநிஷத்துக்கள் என்ற காட்டில், தனது உயர்ந்த கல்யாண குணங்கள் என்ற வலை விரித்து, அவர்களைப் பிடிக்க எத்தனிக்கிறான். இந்தச் செயல் உன்னுடன் இணைந்தே நடைபெறுகிறது.