Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 304)
Paththati 11 - ஸஞ்சார பத்ததி
தடபுவி யமுநாயா: சந்ந வ்ருத்தௌ முகுந்தே முஹு: அதிகமஹேதோ: முஹ்யதாம் யௌவதாநாம் சமயிதும் அலம் ஆஸீத் சங்கசக்ராதி சிஹ்நா ப்ரதிபத விசிகித்ஸாம் பாதுகே பத்ததி: தே
நம்பெருமாளின் பாதுகையே! யமுனை ஆற்றின் கரையில் ஒருநாள் க்ருஷ்ணன் கோபிகைகளுடன் விளையாடி நின்றபோது, திடீரென மறைந்து விட்டான். அவனைக் காணாமல் அந்தப் பெண்கள் திகைத்து நின்றனர். அங்கு இருந்த திருவடித் தடங்கள் யாருடையது என்ற ஐயம் அவர்களுக்கு எழுந்தது. சங்கு சக்ரத்துடன் கூடிய உனது அடையாளங்கள், அவை க்ருஷ்ணனின் அடிச்சுவடுகளே என்று அவர்களுக்குக் காண்பித்தன.