Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 303)
Paththati 11 - ஸஞ்சார பத்ததி
ப்ரதிபவநம் அநந்யே பாதுகே த்வத் ப்ரபாவாத் விவிதவபுஷி தேவே விப்ரமத் யூதகாலே அபிலஷித ஸபத்நீ கேஹயாத்ரா விகாதம் க்லஹயதி ரஹஸி த்வம் ஷோடச ஸ்த்ரீ ஸஹஸ்ரம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது மகிமை காரணமாகக் க்ருஷ்ணன் பல உருவங்கள் எடுத்து, தனது பதினாறாயிரம் தேவிகளின் இல்லங்களில் ஒரே நேரத்தில் நின்றான். அவ்விதம் உள்ளபோது, ஒவ்வொரு இல்லத்திலும் இருந்த க்ருஷ்ணன் மற்றவள் பற்றி நினைக்காமல் இருந்தான். இவ்விதம் அந்தந்த தேவிமார்கள், க்ருஷ்ணன் தனது இல்லத்தை விட்டு அகன்று விடக்கூடாது என்பதற்காக உன்னைப் பந்தயமாக வைத்தனர் (பந்தயம் என்றால் சொக்கட்டான் ஆட்டத்தில் பயன்படும் காய் ஆகும். ஆக, பாதுகை இல்லாமல் க்ருஷ்ணன் செல்ல மாட்டான் என்று உறுதி).