Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 302)
Paththati 11 - ஸஞ்சார பத்ததி
ஸ்ப்ருசஸி பதஸரோஜம் பாதுகே நிர்விகாதம் ப்ரவிசஸி ச ஸமஸ்தாம் தேவி சுத்தாந்த கக்ஷ்யாம் அபரமபி முராரே: பூர்வம் ஆபீரகந்யாஸு அபிஸரண விதீநாம் அக்ரிமா ஸாக்ஷிணீ த்வம்
பாதுகாதேவியே! பெரியபெருமாளின் தாமரை போன்ற அழகிய திருவடிகளை நீ எந்தவிதமான தடங்கலும் இன்றி, மிகவும் எளிதாகத் தொடுகிறாய். அவனது அந்தப்புரங்களிலும் எளிதாகப் புகுந்து செல்கிறாய். அவன் க்ருஷ்ணனாக அவதாரம் செய்தபோது, இடைப்பெண்களுடன் விளையாடி மகிழ்ந்த நிலைக்கு நீயே முதல் சாட்சியாக உள்ளாய்.