Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 301)
Paththati 11 - ஸஞ்சார பத்ததி
சரத் உபகமகாலே ஸந்த்யஜந் யோகநித்ராம் சரணம் உபகதாநாம் த்ராணஹேதோ: ப்ரயாஸ்யந் ஜலதி துஹிது: அங்காத் மந்தம் ஆதாய தேவி த்வயி கலு நிததாநி ஸ்வம் பதம் ரங்கநாத:
பாதுகாதேவியே! சரத் காலம் வந்தவுடன் பெரியபெருமாள் தனது யோக நித்திரையில் இருந்து எழுகின்றான். தன்னைச் சரணம் புகுந்தவர்களைக் காப்பாற்றும் பொருட்டு எழுகின்றான். ஸ்ரீரங்கநாச்சியாரின் மடி மீது வைத்திருந்த தனது திருவடிகளை, மெதுவாக உன் மீது வைத்தபடி எழுகிறான்.