Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 300)

Paththati 11 - ஸஞ்சார பத்ததி

நிர்விஷ்ட நாக சயநேந பரேண பும்ஸா ந்யஸ்தே பதே த்வயி பதாவநி லோகஹேதோ: ஸ்வர்கௌகஸாம் த்வத் அநுதாவந அதத் பராணாம் ஸத்ய: பதாநி விபதாம் அபதம் பவந்தி

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஆதிசேஷனில் சயனித்துள்ள பெரியபெருமாள், இந்த உலகின் நன்மைக்காக எழுந்து, உன் மீது தனது திருவடிகளை வைக்கிறான். இதனால் உன் பின்னே வரும் ஆசை கொண்ட தேவர்களின் பதவிகள் எந்தவிதமான ஆபத்தும் இல்லாமல் காப்பாற்றப்படுகின்றன.