Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 299)
Paththati 11 - ஸஞ்சார பத்ததி
நித்யம் ய ஏவ ஜகதோ மணிபாதரக்ஷே ஸத்தாஸ்திதி ப்ரயதநேஷு பரம் நிதாநம் யோ அபி ஸ்வதந்த்ர சரித: தவத் அதீந வ்ருத்தி: கா வா கதா ததிதரேஷு மிதம்பசேஷு
இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! இந்த உலகைப் படைப்பது, இந்த உலகில் உள்ள அனைத்தைக் காட்டிலும் உயர்ந்திருப்பது ஆகிய தன்மைகளை உடைய ஸ்ரீரங்கநாதனே உன் வசப்பட்டுள்ளான். இப்படி உள்ளபோது இந்த உலகில் உள்ள மற்ற அற்பர்கள் உனக்கு அடிமை என்று கூறவும் வேண்டுமா?