Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 298)

Paththati 11 - ஸஞ்சார பத்ததி

நிர்வ்யஜ்யமாந நவதாள லயப்ரதிம்நா நிர்யந்த்ரணேந நிஜஸஞ்சரண க்ரமேண ம்ருத்நாஸி ரங்கந்ருபதே: மணிபாதுகே த்வம் துக்காத் மகாந் ப்ரணமதாம் துரித ப்ரரோஹாந்

ஸ்ரீரங்கநாதனின் இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! உன்னால் பிரகாசம் பெற்ற ஸ்ரீரங்கநாதனின் நடை எவ்விதம் உள்ளது என்றால் -அனைவரும் காணும்படியும், வியப்பு அளிக்கும்படியும், தாளம் மற்றும் லயம் இணைந்ததாகவும், எந்தத் தடையும் இல்லாமலும் உள்ளது. இப்படிப்பட்ட நம்பெருமாளின் நடை அழகைக் கண்டு வணங்குபவர்களின் பாவம் அனைத்தையும் நீ நசுக்கிவிடுகிறாய்.