Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 297)

Paththati 11 - ஸஞ்சார பத்ததி

பிக்ஷாம் அபேக்ஷ்ய தநுஜேந்த்ர க்ருஹம் ப்ரயாது: குப்த்யை கவாம் விஹரதோ வஹதச் ச தூத்யம் தத்தாத்ருசாநி சரணாவநி ரங்கபர்த்து: த்வத் ஸங்கமேந ஸுபகாநி விசேஷ்டிதாநி

திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! மஹாபலியிடம் யாசகம் சென்றான், பசுக்களைக் காப்பாற்றும் விதமாக அவற்றுடன் திரிந்தான், பண்டவர்களுக்காகத் தூது சென்றான் – இத்தனை தாழ்வான செயல்களைச் செய்தபோதும், ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் ஏன் தாழ்ந்து போகவில்லை என்றால் - உன்னுடைய தொடர்பினால் ஆகும்.