Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 296)

Paththati 11 - ஸஞ்சார பத்ததி

விஷ்ணோ: பதம் கதிவசாத் அபரித்ய ஜந்தீம் லோகேஷு நித்ய விஷமேஷு ஸமப்ரசாராம் அந்வேதும் அர்ஹதி த்ருதாம் அகிலை: ஸுரேந்த்ரை: கங்கா கதம் நு கருடத்வஜ பாதுகே த்வாம்

கருடனைத் தனது கொடியில் கொண்ட பெரியபெருமாளின் பாதுகையே! கங்கை நதியானது மேடு பள்ளங்களில் ஓடும்போது, பெரியபெருமாளின் திருவடிகளை விட்டுப் பிரிந்து ஓட வேண்டியுள்ளது. ஆனால் நீயோ எப்போதும் அவன் திருவடிகளை விட்டுப் பிரியாமல் உள்ளாய். மேலும் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று வேறுபாடு காணாமல் அனைவரின் தலையிலும் சமமாகவே ஆதரித்தபடி உள்ளாய். ஆகவே கங்கை உனக்கு எவ்விதம் ஒப்பாகும்?