Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 295)

Paththati 11 - ஸஞ்சார பத்ததி

ரங்கேச்வரே ஸமதிரூட விஹங்கராஜே மாதங்கராஜ வித்ருதாம் மணிபாதுகே த்வாம் அந்வாஸதே வித்ருதசாரு ஸிதாதபத்ரா: ஸ்வர்கௌகஸ: ஸுபக சாமர லோல ஹஸ்தா:

இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் கருடன் மீது எழுந்தருளுகிறான். அப்போது உன்னைத் தேவர்கள், ஐராவதத்தின் மீது அமர வைத்தபடியும், சாமரங்கள் வீசியபடியும், வெண்குடை கவிழ்த்தபடியும் எழுந்தருளச் செய்கின்றனர்.