Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 294)
Paththati 11 - ஸஞ்சார பத்ததி
அந்த: த்ருதீய நயநை: ஸ்வயம் உத்தமாங்கை: ஆவிர்ப பவிஷ்யத் அதிரிக்த முக அம்புஜைர்வா ந்யஸ்யந்தி ரங்கரஸிகஸ்ய விஹாரகாலே வாரக்ரமேண க்ருதிநோ மணிபாதுகே த்வாம்
இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! புண்ணியம் செய்தவர்கள் தங்கள் புண்ணியத்தின் விளைவாக மூன்றாவது கண்ணையோ (சிவபதவி) அல்லது மூன்று தலைகளையோ (ப்ரம்மபதவி) அடைந்து விடுவார்கள். இவர்கள் ஸ்ரீரங்கநாதன் சஞ்சாரம் செய்யும்போது, தங்கள் தலைகளில் உன்னை ஏந்தியபடி, அவனிடம் சேர்க்கின்றனர்.