Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 293)
Paththati 11 - ஸஞ்சார பத்ததி
போக அர்ச்சநாநி க்ருதிபி: பரிகல்பிதாநி ப்ரீத்யைவ ரங்கந்ருபதி: ப்ரதிபத்யமான: பச்யத்ஸு நித்யம் இதரேஷு பரிச்சதேஷு ப்ரத்யாஸநம் பஜதி காஞ்சநபாதுகே த்வம்
தங்கம் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! புண்ணியம் நிறைந்தவர்களால் அடியார்கள் ஸ்ரீரங்கநாதனின் சஞ்சாரத்தின்போது ஆங்காங்கு வழிநடை உபயம் நடத்தப்படுகிறது. அப்போது அந்த மண்டபங்களில் உள்ள குடை, சாமரம் போன்றவைகள் அந்த மண்டபங்களில் அப்படியே உள்ளன. ஆனால் உன்னை மட்டும் திருவடிகளில் சாற்றியபடி அவன் ஒவ்வொரு ஆசனத்தையும் சென்று சேர்கிறான்.