Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 292)

Paththati 11 - ஸஞ்சார பத்ததி

நித்யம் பதாவநி நிவேச்ய பதம் பவத்யாம் நிஷ்பந்த கல்ப பரிமேய பரிச்சதாநி ச்ருங்கார சீதலதராணி பவந்தி காலே ரங்கேச்வரஸ்ய லலிதாநி கதாகதாநி

பெரியபெருமாளின் திருவடிகளைக் காப்பற்றும் பாதுகையே! ஏகாந்த சேவையின்போது உன் மீது திருவடிகளை வைத்து, அழகியமணவாளன் நிற்கிறான். அப்போது குடை, சாமரம் போன்றவை அசையாமல், ஓசை எழுப்பாமல் உள்ளன. இவ்விதம் உள்ள ஸ்ரீரங்கநாதனின் சஞ்சாரம் மிகவும் இன்பம் அளிப்பதாகவும், குளிர்ந்தும் உள்ளது.