Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 291)
Paththati 11 - ஸஞ்சார பத்ததி
ரங்கேச்வரேண ஸஹ லாஸ்யவிசேஷ பாஜோ லீலோசிதேஷு தவ ரத்ந சிலாதலேஷு மத்யே ஸ்திதாநி கசிசிந் மணிபாதரக்ஷே ஸப்யாந் விசேஷம் அநுயோக்தும் இதி ப்ரதீம:
இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் சஞ்சாரத்தின்போது, அவன் அங்காங்கு இரத்தினக்கற்கள் பதித்த இடங்களில் சற்றே நிற்கிறான். இவ்விதம் அவனுடன் நாட்டியம் செய்வது போல் செல்லும் நீ, அவனை நிறுத்த என்ன காரணம்? அந்தக் கோஷ்டியில் உள்ளவர்களிடம், “என்னில் பதிக்கப்பட்ட இரத்தினங்களா, இந்த மேடையில் பதிக்கப்பட்ட இரத்தினங்களா - இதில் எவை அழகாக உள்ளன?” என்று கேட்டு அறிவதற்கே என்று எண்ணுகிறோம்.