Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 290)

Paththati 11 - ஸஞ்சார பத்ததி

ஸம்பத்யதே ஸமுசிதம் க்ரமம் ஆச்ரயந்த்யா ஸத்வர்த்மநா பகவத: அபி கதிர்பவத்யா ஈஷ்டே பதாவநி புந: க இவேதரேஷாம் வ்யாவர்த்தநஸ்ய விஷமாத் அபத ப்ரசாராத்

பெரியபெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் நல்ல வழியில் சென்று சஞ்சாரம் செய்வது என்பது, உனது அடிவைப்பு மூலமே உண்டாகிறது. இப்படி உள்ளபோது, மற்றவர்களைத் தீயவழிகளில் நடக்காமல் திசை திருப்பும் திறன் வேறு யாரிடம் உள்ளது?