Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 289)

Paththati 11 - ஸஞ்சார பத்ததி

அக்ஷேத்ரவித்பி: அதிகந்தும் அசக்யவ்ருத்தி: மாதஸ்த்வயா நிரவதி: நிதி: அப்ரமேய: ரத்யாந்தரேஷு சரணாவநி ரங்கஸங்கீ வாத்ஸல்ய நிக்நமநஸா ஜநஸாத் க்ருதோ அஸௌ

பெரியபெருமாளின் பாதுகையே! சரீரத்தில் ஆத்மா உள்ளது என்ற உண்மை அறியாமல் உள்ளவர்களால் அடைவதற்குக் கடினமாக உள்ளது; அளவற்று உள்ளது; இப்படிப்பட்டது என்று அறிய இயலாததாக உள்ளது; திருவரங்கத்தின் பெரிய நிதியாக உள்ளது - இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனை, அபாரமான கருணை உள்ளத உனது குணம் காரணமாகவே, திருவரங்க வீதிகளில் அனைவரும் காணும்படிச் செய்கிறாய்.