Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 288)

Paththati 11 - ஸஞ்சார பத்ததி

பாதாவநி க்வசந விக்ரமணே புஜாநாம் பஞ்சாயுதீ கரருஹைர் பஜதே விகல்பம் நித்யம் த்வம் ஏவ நியதா பதயோர் முராரே: தேநாஸி நூநம் அவிகல்ப ஸமாதி யோக்யா

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் புஜங்கள் ஒரு சில காலகட்டங்களில், ஆயுதம் என்பது இல்லாமல் நகங்கள் கொண்டு, தங்கள் செயலை நிறைவேற்றி விடுகின்றன (ஹிரண்யகசிபு வதம்). ஆனால் திருவடிகள் கொண்டு சஞ்சாரம் செய்யும் காலத்தில் நீ எப்போதும் உள்ளாய். ஆக உனக்குப் பதிலாக வேறு ஒன்று உள்ளது என்ற நிலை இல்லவே இல்லை.