Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 287)

Paththati 11 - ஸஞ்சார பத்ததி

மாத: த்ரயீ மயதயா சரணப்ரமாணே த்வே விக்ரமேஷு விவிதேஷு ஸஹாயபூதே நாதஸ்ய ஸாது பரிரக்ஷண கர்மணி த்வம் துஷ்க்ருத் விநாஸந தசாஸு விஹங்கராஜ:

இராமனின் திருவடிகளை அவனது தாய் போன்று பாதுகாக்கும் பாதுகையே! வேதமயமாகவே இருந்து, ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளின் சஞ்சாரத்திற்குக் காரணமாக இரண்டு கூறப்பட்டன. அவை என்ன? ஸ்ரீரங்கநாதன் நல்லவர்களைக் காக்கும்போது, அவன் நடந்து செல்ல நீ உதவுகிறாய். நீ தீயவர்களை அழிக்க விரைவாகச் செல்ல கருடன் உதவுகிறான்.