Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 286)
Paththati 11 - ஸஞ்சார பத்ததி
வ்ருத்திம் கவாம் ஜநயிதும் பஜதா விஹாராந் க்ருஷ்ணேந ரங்கரஸிகேந க்ருதாச்ரயாயா: ஸஞ்சாரதஸ் தவ ததா மணிபாதரக்ஷே ப்ருந்தாவநம் ஸபதி நந்தநதுல்யம் ஆஸீத்
இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! பசுக்களைப் பெருக்கவும், அவற்றைக் காக்கவும் உறுதி செய்த பெரியபெருமாள், க்ருஷ்ணனாகச் சஞ்சாரம் செய்தான். அப்போது அவன் உன்னைச் சாற்றியபடி சஞ்சாரம் செய்தான். இதனால் அவன் உலவிய ப்ருந்தாவனம் முழுவதும் இந்திரனின் தோட்டம் போன்று அழகு பெற்றது.