Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 285)
Paththati 11 - ஸஞ்சார பத்ததி
த்வத் ஸங்கமாத் நநு ஸக்ருத் விதிஸம்ப்ரயுக்தா சுத்திம் பராம் அதிஜகாம சிவத்வ ஹேதும் ரங்காதிராஜ பதரக்ஷிணி கீத்ருசீ ஸா கங்கா பபூவ பவதீய கதாகதேந
திருவரங்கத்தின் சக்ரவர்த்தியான ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! த்ரிவிக்ரமனாக உலகம் அளந்தபோது அவனது திருவடிகளில் ப்ரம்மனால் சேர்க்கப்பட்ட கங்கை, நீ அவன் திருவடிகளில் இருந்ததால், பெயரில் மட்டும் சிவனாக (தூய்மை) இல்லாமல் உண்மையாகவே தூய்மை பெற்றது. இப்படி உள்ளபோது நீ அந்த கங்கையின் மீது இருமுறை பயணித்தாய் (இராமாவதாரத்தில்). அப்படி எனில் கங்கை பெற்ற பேறு என்ன?