Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 284)
Paththati 11 - ஸஞ்சார பத்ததி
விக்ரம்ய பூமிம் அகிலாம் பலிநா ப்ரதிஷ்டாம் தேவே பதாவநி திவம் பரிமாதுகாமே ஆஸீததோ திநகரஸ்ய கரோபதாபாத் ஸம்ரக்ஷிதும் பத ஸரோஜம் உபர்ய பூஸ்த்வம்
பெரியபெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! பெரியபெருமாள், மஹாபலி மூலம் தானமாக அளிக்கப்பட்ட மூன்று உலகங்களையும் அளந்து எடுக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டான். அப்போது ஆகாயத்தை அளப்பதற்காகத் தனது திருவடியை உயரத் தூக்கினான். அந்த நேரம், தாமரை போன்ற அவன் திருவடிகளின் மீது சூரியன் பட்டு, அவை வாடாமல் இருக்கும்படி, அவன் திருவடியை நீ காத்தாய்.