Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 283)
Paththati 11 - ஸஞ்சார பத்ததி
தவத்தஸ் த்ரிவிஷ்டபசராந் அஸபத்நயிஷ்யந் ஆருஹ்ய தார்க்ஷ்யம் அவருஹ்ய ச தத்க்ஷணேந சுத்தாந்த பூமிஷு புநர் மணிபாதரக்ஷே விச்ராம்யதி த்வயி விஹாரவசேந சௌரி:
இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்வர்க்கத்தில் உள்ள தேவர்களுக்கு அசுரர்கள் மூலம் எழுந்த துயரத்தை நீக்குவதற்காக, பெரியபெருமாள் உன்னை விட்டு, கருடன் மீது ஏறிச் சென்று அவர்களைக் காத்தான். அதன் பின்னர் அவன் மீண்டும் வந்து, அந்தப்புரத்தில் சஞ்சாரம் செய்தபோது உன்னை சாற்றிக் கொண்டான். அப்போது அல்லவா அவனது களைப்பு நீங்கியது?