Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 282)

Paththati 11 - ஸஞ்சார பத்ததி

ஸஞ்சாரயந்தீ பதம் அந்வதிஷ்ட: ஸஹாய க்ருத்யம் மணிபாதரக்ஷே மாத: த்வம் ஏகா மனு வம்சகோப்து: கோபாயதோ கௌதம தர்மதாராந்

பெரியபெருமாளின் திருவடிகளைத் தாய் போன்று பாதுகாப்பவளே! நீ அல்லவா இராமனின் திருவடிகளை நடக்கும்படிச் செய்தாய்? இதனால் அல்லவா இராமனின் திருவடிகள், கௌதமரின் பத்தினியாகிய அகலிகையின் சாபத்தைத் தீர்த்தன? ஆக, உன்னால் அல்லவா மனுவம்சத்தில் வந்த இராமனுக்கு இந்தப் பெருமை ஏற்பட்டது?