Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 281)

Paththati 11 - ஸஞ்சார பத்ததி

பதஸ்ப்ருசா ரங்கபதிர் பவத்யா விசக்ரமே விச்வம் இதம் க்ஷணேந ததஸ்ய மந்யே மணிபாதரக்ஷே த்வயைவ விக்யாதம் உருக்ரமத்வம்

இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! நீ தனது (எம்பெருமானுடைய) திருவடிகளில் இருக்கிறாய் என்ற காரணத்தினால், உன்னால்தான், இந்த உலகம் முழுவதையும் த்ரிவிக்ரமனாக ஸ்ரீரங்கநாதன் அளந்தான். ஆக, உன்னால் அல்லவோ பெரியபெருமாளுக்கு “உருக்கிரமன்” என்னும் திருநாமம் கிடைத்தது என்று கூறலாம்.