Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 280)

Paththati 11 - ஸஞ்சார பத்ததி

ஸஹப்ரயாதா ஸததம் ப்ரயாணே ப்ராப்தாஸநே ஸம்ச்ரித பாத பீடா அலங்கநீயா ஸஹஜேந பூம்நா சாயேவ சௌரேர் மணிபாதுகே த்வம்

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் நடந்து செல்லும்போது, நீ அவன் கூடவே செல்கிறாய். அவன் தனது ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்துவிட்டால், அவன் பாதபீடங்களில் நீயும் அமர்ந்து விடுகிறாய். உனது இயல்பாகவே அமைந்துவிட்ட பெருமை காரணமாக, தனது நிழலை விட்டுப் பிரிய இயலாதமல் ஸ்ரீரங்கநாதனின் நிழலாக நீ உள்ளாய்.