Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 279)
Paththati 11 - ஸஞ்சார பத்ததி
உபாகதாநாம் உபதாப சாந்த்யை ஸுகாவகாஹாம் கதிம் உத்வஹந்தீம் பச்யாமி சௌரே: பதவாஹிநீம் த்வாம் நிம்நேஷு துங்கேஷு ச நிவிசேஷாம்
பாதுகையே! துன்பம் கொண்டவர்களின் துயரம் நீங்கும்படி ஸ்ரீரங்கநாதன் அழகாக நடந்து வருகிறான். அப்படி அவன் சஞ்சாரம் செய்யும்போது உயர்ந்த இடங்கள், தாழ்ந்த இடங்கள் என்று பாராமல், அவன் திருவடிகளைத் தாங்கியபடி நீ வருகிறாய். இதனால் நீ உயந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று வேற்றுமை காணாமல் உள்ளவள் என்று அனைவரும் கூறுகின்றனர்.