Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 278)

Paththati 11 - ஸஞ்சார பத்ததி

க்ருபாவிசேஷாத் க்ஷமயா ஸமேதாம் ப்ரவர்த்தமாநாம் ஜகத: விபூத்யை அவைமி நித்யம் மணிபாதுகே த்வாம் ஆகஸ்மகீம் ரங்கபதே: ப்ரஸத்திம்

இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! பூமியுடன் ஒத்த பொறுமை உடையவளும், இந்த உலகின் நன்மைக்காக அங்கும் இங்கும் உலவியபடி உள்ளவளுமாக நீ உள்ளாய். ஸ்ரீரங்கநாதனின் அனுக்ரஹம் என்பதே வடிவம் எடுத்தவளாக நீ உள்ளாய். வேறு எந்தக் காரணத்தினாலும் நீ இல்லை என்றே நான் எண்ணுகிறேன்.