Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 277)

Paththati 11 - ஸஞ்சார பத்ததி

பதேஷு மந்தேஷு மஹத்ஸ்வபி த்வம் நீரந்த்ர ஸம்ச்லேஷவதீ முராரே: ப்ரத்யாயநார்த்தம் கில பாதுகே ந: ஸ்வாபாவிகம் தர்சயஸி ப்ரபாவம்

பாதுகையே! பெரியபெருமாள் நம்பெருமாளாக நிற்கும்போது அவன் திருவடிகள் மிகவும் சிறியதாக உள்ளன. சயனித்தவனாக உள்ளபோது பெரிதாக உள்ளன. ஆனால் நீ அவனது திருவடிகளுக்கு ஏற்றபடி உன்னை, சிறிதும் இடைவெளி இன்றி மாற்றிக் கொள்கிறாய். எங்களுக்கு உன் மீது நம்பிக்கை எற்படுவதற்காக அல்லவா உனது இயற்கையாக உள்ள இந்தப் பெருமைகளை நீ வெளிப்படுத்துகிறாய்?