Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 276)

Paththati 11 - ஸஞ்சார பத்ததி

வ்யூஹ அநுப்பூர்வீ ருசிராந் விஹாராந் பதக்ரமேண ப்ரதிபத்யமாநா பிபர்ஷி நித்யம் மணிபாதுகே த்வம் முரத்விஷ: மூர்த்திரிவ த்ரிலோகீம்

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! வாஸுதேவன், ஸங்கர்ஷணன் போன்று பல வ்யூஹ வரிசை மூலமாகவும், அழகாக அடி எடுத்து ஒய்யார நடை நடக்கும் ஸ்ரீரங்கநாதனின் சஞ்சாரத்தின் மூலமாகவும் இந்த உலகத்தைப் பெரியபெருமாளின் திருமேனி எவ்விதம் காப்பாற்றுகிறதோ, அதுபோல் நீயும் செய்கிறாய்.