Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 275)

Paththati 11 - ஸஞ்சார பத்ததி

த்வயா அநுபத்தாம் மணிபாதரக்ஷே லீலா கதிம் ரங்கசயஸ்ய பும்ஸ: நிசாமயந்த: ந புநர்பஜந்தே ஸம்ஸார காந்தார கதாகதாநி

இரத்தினக் கற்கள்கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கத்தில் சயனித்துள்ள பரமபுருஷனாகிய பெரியபெருமாள், உன்னைச் சாற்றிக் கொண்டு சஞ்சாரம் செய்கிறான். இதனைக் காண்பவர்கள், இந்த உலகில் பிறப்பது-இறப்பது என்று சுழற்சியை இனி மேற்கொள்வதில்லை.