Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 274)

Paththati 11 - ஸஞ்சார பத்ததி

ப்ராப்த அதிகாரா: பதய: ப்ரஜாநாம் உத்தம்ஸிதாம் இத்தம் பாதுகே த்வாம் ரங்கேசிது: ஸ்வைர விஹார காலே ஸம்யோஜயந்தி அங்கிரி ஸரோஜ யுக்மே

மிகவும் உயர்ந்த பாதுகையே! பிரம்ம பதவியை அடைபவர்கள் தங்கள் தலைகளில் உன்னை அலங்காரமாக வைத்துக் கொள்கின்றனர். ஸ்ரீரங்கநாதன் ஸஞ்சாரம் செய்யும் நேரம் வந்தவுடன், உன்னைத் தங்கள் தலையில் இருந்து எடுத்து, ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் அவர்கள் சேர்த்து விடுகின்றனர்.