Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 273)

Paththati 11 - ஸஞ்சார பத்ததி

உத்தஸ்துஷ: ரங்கசயஸ்ய சேஷாத் ஆஸ்தாந ஸிம்ஹாஸநம் ஆருருக்ஷோ: மத்யே நிசாந்தம் மணிபாதுகே த்வாம் லீலா பதந்யாஸ ஸகீம் ப்ரபத்யே

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஆதிசேஷன் என்னும் தனது படுக்கையிலிருந்து துயில் எழுகின்ற ஸ்ரீரங்கநாதன், தனது சபையை அடைந்து, ஸிம்ஹாஸனத்தில் அமரவேண்டும் என்று விரும்புகிறான். இதற்காக உன்னைத் தனது திருவடிகளில் சாற்றிக் கொண்டு நடந்தான். இப்படிப்பட்ட உன்னையே எனக்கு உபாயம் என்று கொள்கிறேன்.