Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 272)
Paththati 11 - ஸஞ்சார பத்ததி
சரணத்வயம் அர்ப்பகஸ்ய சௌரே: சரத் அம்போருஹ சாதுரீ துரீணம் சகடாஸுர தாடநே அபி குப்தம் தவ சக்த்யா கில பாதுகே ததாஸீத்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் க்ருஷ்ணனாக அவதரித்தபோது அவனது திருவடிகளானவை, சரத்காலத்தில் மலரும் தாமரை போன்று முழு அழகையும் பெற்றிருந்தன. அப்படிப்பட்ட மென்மையான திருவடிகளைக் கொண்ட அந்தக் குழந்தை, தனது திருவடிகளால் சகடாசுரனை உதைக்கும் வலிமையை எங்கிருந்து பெற்றது? உனது சக்தியால் அல்லவோ?