Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 271)
Paththati 11 - ஸஞ்சார பத்ததி
க்ருபயா மதுவைரி பாதரக்ஷே கடிநே சேதஸி மாமகே விஹார்த்தும் மகுடேஷு திவௌகஸாம் விதத்தே பவதீ ரத்ந விஸம்ஸ்துலேஷு யோக்யாம்
மது என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! எனது மனம் மிகவும் கடினமான கல் போன்றதாகும். அந்த மனதுடன் பழக நீ செய்வது என்ன? தேவர்களின் க்ரீடங்களில் மேடு பள்ளங்களாக உள்ள இரத்தினக் கற்றளுடன் நீ பழகிக் கொள்கிறாய் போலும் (அப்போது என் மனதுடன் பழகுவதற்கு எளிதாகிவிடும் அல்லவா).