Sri Paduka Sahasram - Paththati 11 - ஸஞ்சார பத்ததி (ச்லோகம் 270)
Paththati 11 - ஸஞ்சார பத்ததி
பதயோரநயோ: பரஸ்ய பும்ஸ: தத் அநுக்ராஹ்ய விஹார பத்ததேர் வா சிரஸோ மணிபாதுகே ச்ருதீநாம் மநஸோ வா மம பூஷணம் த்வம் ஏகா
இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! பரமபுருஷனாகிய ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளுக்கு ஏற்ற அலங்காரமாக நீ உள்ளாய். அந்தத் திருவடிகள் சஞ்சாரம் செய்யத் தகுந்ததாக உள்ள வழி முழுவதற்கும் நீயே அலங்காரமாக உள்ளாய். வேதங்களின் தலையில் உள்ள ஒப்பற்ற ஆபரணமாக உள்ளாய். என்னுடைய மனதிலும் நீ அலங்காரமாக உள்ளாய்.